ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் ஆறு இடங்களில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். முதலில், நகரின் முக்கிய தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் ஆஸ்திரியாவுடன் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வியன்னாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் அதிர்ச்சி கலந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் ஆஸ்திரியாவுடன் இந்தியா துணை நிற்கும். உயிரிழந்தோருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
Deeply shocked and saddened by the dastardly terror attacks in Vienna. India stands with Austria during this tragic time. My thoughts are with the victims and their families.
— Narendra Modi (@narendramodi) November 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply shocked and saddened by the dastardly terror attacks in Vienna. India stands with Austria during this tragic time. My thoughts are with the victims and their families.
— Narendra Modi (@narendramodi) November 3, 2020Deeply shocked and saddened by the dastardly terror attacks in Vienna. India stands with Austria during this tragic time. My thoughts are with the victims and their families.
— Narendra Modi (@narendramodi) November 3, 2020
தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதியை வியன்னா காவல்துறை சுட்டுவீழ்த்தியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் தலைமறைவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரியாவில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் சுட்டுக்கொலை