உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்து தேங்குவதாகவும், இதனால் நீதி தாமதிக்கப்பட்டு வழங்குவதாகவும் பலர் குற்றஞ்சாட்டிவந்தனர். இந்த விவகாரத்தில் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்துவந்த நிலையில், டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆலோசனை கூறியுள்ளார். அரசியலமைப்பு விவகாரங்களை விசாரிக்க நான்கு பிராந்திய அமர்வுகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்த அவர், இதற்கு அரசியலைப்பில் திருத்தம் கொண்டு வரத் தேவையில்லை அரசியலமைப்பு 130இன் கீழ் இதனை செய்யலாம் எனக் கூறினார்.
"தேர்தல் தொடர்பான வழக்குகள், அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். இதற்கு சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது" என வெங்கையாடு நாயுடு தெரிவித்தார். ஆனால், இந்தக் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.