ETV Bharat / bharat

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராஜசேகரன் காலமானார் - காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராஜசேகரன் காலமானார்

பெங்களூரு: காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராஜசேகரன் காலமானார். அவருக்கு வயது 91.

M V Rajasekharan Congress leader Union minister Karnataka Congress காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராஜசேகரன் காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜசேகரன், எடியூரப்பா இரங்கல், கர்நாடக காங்கிரஸ்

author img

By

Published : Apr 13, 2020, 10:15 AM IST

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான எம்.வி. ராஜசேகரன் (91) இன்று காலமானார். ராஜசேகரன் மனைவி கிரிஜா மற்றும் இரு மகன்கள், இரண்டு மகள்கள் கவனிப்பில் இருந்து வந்தார்.

வயது முதிர்வு காரணமாக அவருக்கு நீண்டகால உடல் பிரச்னைகள் இருந்தது. இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது.

ராஜசேகரன், ராமநகரா மாவட்டத்திலுள்ள மரலவாடி என்ற கிராமத்தில் 1928ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார். இவரது மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “ராஜசேகரன் பணிவு, எளிமை, மிகுந்த முதிர்ச்சி கொண்ட அரசியல்வாதி. அவர் மக்களவையில் கனகபுரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மத்திய புள்ளிவிவர அமைச்சராக இருந்தப்போது திட்டமிடல் அரசியலுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தார். அவரின் ஆத்மா இறைவன் காலடியில் இளைப்பாறட்டும். அவரின் மறைவு ஒரு பேரிழப்பு. அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என கூறியுள்ளார்.

மறைந்த ராஜசேகரன், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் நிஜலிங்கப்பாவின் மருமகன் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க:'கோவிட்-19க்கு எதிராக போர்க்கால அடிப்படையில் தீர்வை உருவாக்குங்கள்'- ஹர்ஷவர்தன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.