உலகளவில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தொற்றின் பாதிப்பு அதிகளவு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு நகரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் மாண்டியா பகுதியிலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், கரோனா வைரஸை ஒழிக்க காய்கறிகளைக் கொண்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இது குறித்து பேசிய கோயில் அர்ச்சகர், "உயிர்க்கொல்லி நோயான கரோனா வைரஸினை ஒழிக்க காலிஃப்ளவர் உள்ளிட்ட காய்கறிகளால் சாமுண்டீஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
சண்டிகா யாகம், கணபதி ஹோமம், பஞ்சாமிருதா அபிஷேகம், ருத்ராபிஷேகம், குங்கும அர்ச்சனைஆகியவை தகுந்த இடைவெளிகளை கடைப்பிடித்து செய்யப்பட்டன" என்றார்.