ETV Bharat / bharat

கரோனா வைரஸ் தடுப்பூசி: மனிதர்களுக்கு சோதனை செய்யும் கட்டத்தை எட்டிய மருத்துவக் குழுக்கள்

கரோனா வைரஸ் தொற்றுக்காக தடுப்பூசியை மனிதர்களில் சோதனை செய்யும் கட்டத்தை ஐந்து மருத்துவக் குழுக்கள் எட்டியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Vaccine emerges to combat novel corona virus says  ICMR

author img

By

Published : Apr 20, 2020, 11:29 AM IST

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது ஐந்து ஆராய்ச்சியாளர் குழுக்களால் கரோனா வைரஸ் தொற்றுக்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை மனிதர்களுக்கு சோதனை செய்யும் முயற்சிக்காக கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்தது. விலங்குகள் மீது இந்த சோதனையை செய்த பிறகே இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கு சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை ஆராய்ச்சியாளர், டாக்டர் ராமன் கங்காகேத்கர் கூறுகையில், ' உலகம் முழுவதும் 70 மருத்துவ ஆராய்ச்சி குழுக்கள் கரோனா வைரஸுக்காக தடுப்பூசி தயாரிக்கும் பணயில் ஈடுபட்டுள்ளன. அதில் 5 குழுக்கள் மனிதர்களிடம் சோதனை செய்யும் கட்டத்தை எட்டியுள்ளன.

ஒரு குழுவானது ChAdOX1 எனப்படும் தடுப்பூசியை ஆராய்ச்சி செய்துவருகிறது. விலங்குகளிடம் சோதனை செய்கையில் எந்த பக்க விளைவுகளையும் அது ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது. இந்தத் தடுப்பூசி, வைரஸை எதிர்த்து செயல்படும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். இதன் மூலம் பலரும் பயன்பெறுவர் ' என்றார்.

இதையும் படிங்க... செப்டம்பருக்குள் 10 லட்சம் தடுப்பூசி ஆய்வுகள்; ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.