ETV Bharat / bharat

வனவிலங்குகளால் இந்தாண்டு 22 பேர் உயிரிழப்பு! - வன விலங்குகள் தாக்குதல்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் இந்தாண்டு மட்டும் வனவிலங்குகளால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்டில் வனவிளங்குகளால் இந்தாண்டு 22 பேர் உயிரிழப்பு!
Man animal conflict in uttarakhand
author img

By

Published : Sep 15, 2020, 2:14 AM IST

மனித-விலங்கு மோதல் சம்பவங்கள் மிகுந்த கவலையாகவும், உத்தரகாண்ட் மாநில வனத்துறையினருக்கும் அரசாங்கத்திற்கும் மிகப்பெரிய சவாலாகவும் மாறிவிட்டன. இந்த நெருக்கடியை சமாளிக்க வனத்துறை பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது.

இந்தாண்டு எண்ணிக்கையில், விலங்குகளின் தாக்குதலில் மாநிலத்தில் 22 பேர் இறந்துள்ளனர். மனித-விலங்கு மோதல் சம்பவங்களை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் ஒரு மலைப்பாங்கான மாநிலம் மட்டுமல்ல, காடுகளால் நிறைந்துள்ளது. தற்போது, ​​மாநிலத்தின் 70 சதவீத நிலங்கள் காடுகளால் சூழப்பட்டுள்ளன. எல்லா மலைப்பகுதிகளிலும் வனவிலங்குகளால் மனிதர்கள் பாதிக்கப்படுவதற்கு இதுவே காரணம். பல முறை காட்டு விலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் ஊடுருவி, மனித-விலங்கு மோதலுக்கு வழிவகுக்கிறது.

நிலைமை குறித்து மேலும் விவரங்களை அளித்து, மனித-விலங்கு மோதல் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, விலங்குகளுடன் எவ்வாறு இணைந்து வாழ்வது என்பதை மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் ஜெய்ராஜ் கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், "மனித-விலங்கு மோதல் சம்பவம் நடந்தபோதெல்லாம், பிரதேச வன அலுவலர் அந்த இடத்தை அடைந்து நிலைமையைக் குறைக்கிறார்.

வனப்பகுதிகளின் விளிம்பில் வசிப்பவர்களுக்கு வன விலங்குகளுடன் எவ்வாறு இணைந்து வாழ்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கிராமவாசிகள் தங்கள் கிராமத்தைச் சுற்றி காட்டு புதர்களை வளரவிடக்கூடாது, இயற்கையின் அழைப்புகளுக்கு திறந்த வெளியில் செல்லக்கூடாது" என அறிவுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.