ETV Bharat / bharat

விபத்துக்குள்ளான பெண்ணை 40 கி.மீ., தோளில் தூக்கிச் சென்ற இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர்! - இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை

மருத்துவமனைக்குச் செல்ல வழியின்றி, இரண்டு நாள்களாக காயத்தோடு அவதிப்பட்ட பெண்ணை இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர் 40 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைக்குத் தோளில் தூக்கிச் சென்று அனுமதித்துள்ளனர்.

இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை
இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை
author img

By

Published : Aug 23, 2020, 7:10 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை நீடிப்பதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பித்தோராகர் மாவட்டத்தில் முன்சாரி பகுதியில் உள்ள லாஸ்பா என்ற குக்கிராமத்தில், ஒரு பெண்ணை இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் 25 பேர் கொண்ட குழு மீட்டுள்ளது.

இது குறித்து அந்த காவல் படையிலிருந்த ஒருவர் கூறுகையில், 'கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி, இந்தப் பெண் மலைப்பாதையில் இருந்து விழுந்ததில், கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மோசமான பருவமழைத் தாக்குதலினால் கடந்த இரண்டு நாள்களாக, இவரை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லமுடியவில்லை. இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், அந்த கிராமத்திற்கு விரைந்தோம்' என்றார்.

  • सेवा परम धर्मः।
    ITBP jawans of 14th Battalion carrying an injured woman on stretcher in Pithoragarh District on 22 August, 2020. Jawans carried her to nearest road head covering 40 Kilometres mountainous route on foot in 15 hours. She is being treated and stable now.#Himveers pic.twitter.com/1FYx5VS8QA

    — ITBP (@ITBP_official) August 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மிலாம் தளத்திலிருந்து 22 கி.மீ., தொலைவுள்ள போக்குவரத்து வசதியில்லாத, அந்தக் கிராமத்திற்கு இந்தோ- திபெத் காவல் படையைச் சேர்ந்தவர்கள் நேற்று (ஆகஸ்ட் 22) நடந்தே சென்றுள்ளனர். அங்கு சென்றதும் காயமடைந்த பெண்ணை மருத்துவ தூக்கு படுக்கையில், படுக்க வைத்து 40 கி.மீ., தொலைவுள்ள மருத்துவமனைக்கு தோள்களில் தூக்கிக் கொண்டுச் சென்றனர். வெள்ளம், நிலச்சரிவு என அனைத்து இடர்பாடுகளையும் கடந்து 15 மணிநேரத்தில் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது அந்தப் பெண்ணின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மனித நேயமிக்க செயல் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர் - உடலை மீட்ட தீயணைப்பு துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.