உத்தரப்பிரதேச மாநிலம், துல்லாப்பூர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'எனது கணவர் என் மகளை(மைனர்) 6 மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளார். தொடக்கத்தில் இதுகுறித்து எனக்கு தெரியாது. தெரிந்ததும் கணவரை கண்டித்தேன். காவல்துறையில் புகார் அளிப்பேன் என மிரட்டினேன். அப்போது அவர் திருத்திக்கொள்வதாக தெரிவித்தார்.
ஆனால் தற்போதுவரை அவர் திருந்தவில்லை. என் மகளுக்கு மீண்டும் தொந்தரவு அளிக்கிறார். அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை கைது செய்தனர்.
இதையும் படிங்க: உ.பி-யில் மீண்டும் ஒரு கொடூரம்: துப்பாக்கி முனையில் பெண் பாலியல் வன்கொடுமை