மத்திய ரிசர்வ் படை வீரர்களின் தகவலின்படி, புதன்கிழமை காலை 7.30 மணியளவில், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் 179ஆவது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் ஜம்மு காஷ்மீர் சோபரே மாவட்டத்திலுள்ள மாடர்ன் டவுன் சவுக் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த மசூதி ஒன்றின் அறைக்குள் மறைந்திருந்த பயங்கரவாதிகள், படை வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் தலைமை காவலர்கள் தீப் சந்த் வர்மா, நிலே சவ்டே, காவலர்கள் தீபக் பாட்டீல் மற்றும் போவ்யா ராஜேஷ் ஆகியோர் காயமுற்றனர்.
இந்நிலையில் தீப் சந்த் வர்மா உயிரிழந்தார். இவர் உத்தரப் பிரதேச மாநிலம் ஷிகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 39 வயதான வர்மா, 2003ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையில் இணைந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்னர்தான் ஜம்மு காஷ்மீருக்கு தலைமை காவலராக பணியில் சேர்ந்தார். இவருக்கு கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்துவந்தார் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வீர மரணமடைந்த வீரர் தீப் சந்த்-க்கு அவரது கிராம மக்கள் மரியாதை செலுத்தினர்