கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகப் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். முதலில் அவர்களைச் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப அனுமதி தர மறுத்த மத்திய அரசு, பின் அதற்கு அனுமதியளித்தது.
அவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவருகின்றனர். இருப்பினும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் சாலை வழியே நடந்து செல்வது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
-
Deeply pained to hear about unfortunate deaths of migrant workers in the Auraiya accident. This underlines the necessity for stakeholders, including receiving states, to ease restrictions for all affected people, particularly migrants, & allow limited air, road & rail connections
— Hardeep Singh Puri (@HardeepSPuri) May 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply pained to hear about unfortunate deaths of migrant workers in the Auraiya accident. This underlines the necessity for stakeholders, including receiving states, to ease restrictions for all affected people, particularly migrants, & allow limited air, road & rail connections
— Hardeep Singh Puri (@HardeepSPuri) May 16, 2020Deeply pained to hear about unfortunate deaths of migrant workers in the Auraiya accident. This underlines the necessity for stakeholders, including receiving states, to ease restrictions for all affected people, particularly migrants, & allow limited air, road & rail connections
— Hardeep Singh Puri (@HardeepSPuri) May 16, 2020
அப்படி நடந்து சென்றுகொண்டிருந்தபோது உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 24 வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 36க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தர்.
இது குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "அவுரையா மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, குறிப்பாகப் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, குறைந்த அளவு விமானம், சாலை, ரயில் போக்குவரத்தை மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும். இந்த விபத்துகள் இதையே காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடை பயணமாய் புறப்பட்ட குடிபெயர் தொழிலாளர்கள் - நேரில் சந்தித்த ராகுல்