ETV Bharat / bharat

பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக நகராட்சி செய்த காரியம்! - பெடுல் நகராட்சி சார்பில் பாத்திர வங்கி

போபால்: பெடுல் நகராட்சி சார்பில் பாத்திர வங்கி தொடங்கப்பட்டிருப்பதால் பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக குறையும் என அரசு அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

'Utensil bank' set to reduce single use plastic consumption in Betul

author img

By

Published : Jan 11, 2020, 12:14 PM IST

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், மத்தியப் பிரதேசம் மாநிலம் பெடுல் நகராட்சி சார்பில் பாத்திர வங்கி தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளின்போது, மக்களுக்கு தட்டுகள், கரண்டிகள் உள்ளிட்டவற்றை இந்த வங்கி வழங்குகிறது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாட்டை மக்களிடையே குறைப்பதுதான் இந்த முயற்சியின் நோக்கமாக உள்ளது. நகரங்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவை குறைக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் அல்கேஷ் ஆர்யா, "இதற்காக 1000க்கும் மேற்பட்ட தட்டுகள், கரண்டிகள் ஆகியவற்றை திரட்டியுள்ளோம். மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப நிகழ்ச்சிகளின்போது பாத்திரங்களை எடுத்துச் செல்லலாம். இந்த முயற்சி மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும்.

பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக நகராட்சி செய்த காரியம்!

சேவை இலவசமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வைப்பு தொகையை மக்கள் செலுத்த வேண்டும். இதில் கவனிக்கக்கூடியது என்னவென்றால், நகராட்சி ஊழியர்கள் இதற்காக தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார்கள். இதற்காக, மக்களும் தங்களால் முடிந்த தொகையை அளித்துள்ளனர். மக்கள் பயன்படுத்திய தட்டுகள், கரண்டிகள் உள்ளிட்ட 3000 பாத்திரங்களை இந்த வங்கி இதுவரை சேகரித்துள்ளது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை மக்கள் பயன்படுத்திக் கொள்வதிலிருந்து நிறுத்திக் கொள்வார்கள்” என்றார்.

இதையும் படிங்க...உபி.,யில் பேருந்து - டிரக் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு

Intro:Body:

O:\GFX\9-Jan-2020\PLASTIC STORY FOR 11 JAN

O:\GFX\10-Jan-2020

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.