கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. அதற்கான மருந்தை கண்டிபிடிக்க உலக விஞ்ஞானிகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், மனிதர்கள் மீது பரிசோதனை நடத்திய முதல் முயற்சியில் ரஷ்யா வெற்றி கண்டது. இதனிடையே, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்து கரோனா வைரசுக்கு எதிராக நல்ல எதிர்வினையை ஆற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், "ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதிலும் நைட்ரிக் ஆக்சைடு முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச பிரச்னை, நுரையீரலில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை ஒழுங்கு செய்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
1993 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கரோனா வைரஸ் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பது பற்றிய தகவல்களை ஆராய்ந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள், இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். மற்றவற்றை ஒப்பிடுகையில், நைட்ரிக் ஆக்சைடு வாயுவை சுவாசிப்பதன் மூலம் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும் புனே லோனார் ஏரி... இதான் காரணமா!