குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக திரிணாமுல் சாத்ரா பிரிஷாத் மாணவர் சங்கத்தினர் கொல்கத்தாவில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களுக்கு ஆதரவாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
அப்போது மாணவர்களிடம் மம்தா பானர்ஜி உரையாற்றியபோது, "நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முதலில் போராட்டத்தில் இறங்கியது நாம் தான். குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு நேற்று (ஜன. 10) அறிக்கை வெளியிட்டிருந்தது. மக்கள் ஏற்கும் வரை அது செயல்படாது. கண்டிப்பாக நாம் அதனை அமல்படுத்தக் கூடாது.
ஜனநாயக-மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் பெயரில் யாரையும் பாகுபாடோடு நடத்தக்கூடாது. நான் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை எதிர்க்கிறேம் என தெரிவித்தேன். அவற்றை திரும்பப்பெற வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன்" என்றார்.
இதையும் படிங்க : மோடியின் வெளியுறவுக் கொள்கையின் புதிய ஆயுதம்...!