உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா அமைப்புகள் பிரித்துக்கொள்ள வேண்டும் என, 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனால் இஸ்லாமியர் தரப்பு வாதத்தை அக்டோபர் 15ஆம் தேதி நிறைவு செய்யவும், அடுத்த இரண்டு நாட்களில் இந்துக்கள் தங்களின் வாதத்தை நிறைவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைத்துள்ளதையடுத்து, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் இந்து பண்டிகை தீபாவளி வருவதையொட்டி, அங்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக அண்டை மாநிலங்களிலிருந்து கம்பெனி படைகளும் இறக்கப்பட்டுள்ளன. முன்னதாக டிசம்பர் 10ஆம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க....வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா - அமெரிக்கா இடையே தீவிர பேச்சுவார்த்தை