இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"உத்தரப் பிரதேசத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 19ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடரும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, காலை, மாலை என இரண்டு வேளைகளில் பள்ளிகள் இயங்கும். பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவைப்படும்.
பள்ளிகளின் நுழைவு வாயில், வகுப்புகள், கழிவறைகளில் கிருமி நாசினி வைக்கப்படும். மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
அனைத்து வகுப்புகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை தாண்டக்கூடாது, காலை பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது, ஓய்வு நேரத்தில் மாணவர்கள் வெளியே செல்ல அனுமதியில்லை, உணவு மற்றும் தண்ணீர் பகிரக்கூடாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.