உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்திலுள்ள கந்தாலி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கிராமம் ஒன்று உள்ளது. இந்தக் கிராமத்தில் தனியாக இருந்த பெண்ணுக்கு, அதே கிராமத்தை சேர்ந்தவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் அடித்து துவைத்தனர். மேலும் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரின்பேரில் காவலர்கள் எந்த நடடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், நடந்த சம்பவம் தொடர்பாக கிராம பஞ்சாயத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த பஞ்சாயத்தார், பெண்ணிடம் தவறாக நடந்தவருக்கு பத்து செருப்படி தண்டனை விதித்தனர்.
அதன்பேரில் அவருக்குப் பத்து செருப்படிகள் வழங்கப்பட்டன. மேலும் அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அவரை பஞ்சாயத்தார் ஊரைவிட்டும் ஒதுக்கிவைத்தனர்.
இதையும் படிங்க: நான் கூப்பிடும் போதெல்லாம் வரணும்' - சிறுமியை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்த மாணவன்!