'#SpeakUpForWomenSafety' எனப்படும் பெண்கள் பாதுகாப்பு குறித்த காங்கிரஸ் அரசின் சமூக வலைதள பரப்புரையின் ஒரு பகுதியாக, காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்கவிருந்த தன்னை உத்தரப் பிரதேச காவல் துறையினர் பலவந்தமாக தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
"ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தின் அணுகுமுறை மனிதாபிமானமற்றது மன்னிக்க முடியாதது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுவதற்கு பதில், குற்றவாளிகளைப் பாதுகாப்பதிலேயே அரசு மும்முரம் காட்டுகிறது. எல்லா இடங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்புங்கள். அதுவே மாற்றத்திற்கான படியாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தை சந்தித்தபோதே அரசு அவர்கள் மீதான தனது தாக்குதலைத் தொடங்கிட்டது என்பதை நான் புரிந்துகொண்டேன். குற்றவாளிகளை அரசாங்கம் பாதுகாக்கக்கூடாது. முடிந்த அளவுக்கு விரைவாக அவர்களுக்கு நீதி கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் நாம் அனைவரும் அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும், நாட்டை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்காக சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.