சீன நாட்டில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று அமெரிக்கா, இத்தாலி, ஈரான், இந்தியா எனப் பல நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் இந்தக் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியப் பொருளாதாரம் சரிவை சந்தித்தது மட்டுமல்லாமல் தினசரி கூலி வியாபாரிகளும் வேலையிழந்து தவித்துவருகின்றனர்.
இதனைச் சரிசெய்ய, உத்தரப் பிரதேசத்தில் அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தினக்கூலி தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் இதனால் 20 லட்சம் தினக்கூலி தொழிலார்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இடைக்கால இழப்பீட்டு நிதி, அவர்களது வங்கிக் கணக்குகளின் மூலம் வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருவோம்' - ரஜினிகாந்த்