இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலர் அமித் மோகன் பிரசாத், "53 மாவட்டங்கள் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதேபோன்று பிளிபீத், லாக்கிம்பூர், ஹத்ராஸ், பெய்ரேலி, பிரயக்ராஜ், மாகாஜ்கன்ஞ், ஷாஜாஹான்பூர், பாராபான்கி, ஹார்டோய், கௌஷம்பீ ஆகிய 10 மாவட்டங்கள் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுவரை ஆயிரத்து 412 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதனிடையே, கரோனா பாதிப்பு குறித்து அரசு அலுவலர்களுடன், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலர் அவினாஷ் அவாஸ்தி தெரிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தி, மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வீடுவீடாக சென்று வழங்கும் நடவடிக்கையை உறுதி செய்யுமாறும் முதலமைச்சர் கூறினார் என அவினாஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க : கரோனா நோயாளிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்கும் பாகிஸ்தான்?