ETV Bharat / bharat

அதிருப்தியில் ஆசம்கான்: கை கொடுக்கும் காங்கிரஸ் - சமாஜ்வாதி, அகிலேஷ், ஆசம் கான்

டெல்லி: சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவர் ஆசம்கான் அதிருப்தியில் இருக்கும் நிலையில் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி காய் நகர்த்திவருகிறது.

Azam Khan  Samajwadi Party  Uttar Pradesh  Akhilesh abandons Azam Khan  UP Congress slams Akhilesh Yadav  சமாஜ்வாதி, அகிலேஷ், ஆசம் கான்  அதிருப்தியில் ஆசம் கான், கை கொடுக்கும் காங்கிரஸ்
UP Congress slams Akhilesh for 'abandoning' Azam Khan
author img

By

Published : Mar 4, 2020, 4:46 PM IST

சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவர் ஆசம்கான். சமாஜ்வாதி, அகிலேஷ் யாதவின் செயல்பாடுகளால் ஆசம்கான் அதிருப்தியில் இருப்பதாக அவரது உறவினர் சமீர் அஹமது கான் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் சிறுபான்மை தலைவர் ஷாநவாஸ் ஆலம், “ஒரு கட்சிக்கு தனது வாழ்நாளின் முப்பது ஆண்டுகளை வழங்கிய ஒரு தலைவர் இந்த முறையில் தனிமைப்படுத்தப்படுவது வெட்கக்கேடானது. சமாஜ்வாதி தனது மிக உயரமான தலைவர்களில் ஒருவரின் பின்னால் நிற்க முடியாவிட்டால், அந்தக் கட்சி எவ்வாறு சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்க முடியும்? என்றார்.

மேலும், ஆசம்கானின் உறவினர் தனது பேட்டியில், “சமாஜ்வாதி மூத்த தலைவர், கட்சி மீது மிகவும் வருத்தமடைந்துள்ளளார்” என்று கூறியிருந்தார்.

ஆசம்கான் நில ஆக்கிரமிப்பு, திருட்டு என 84க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அவரது மனைவி தன்சீன் ஃபாத்திமா மற்றும் மகன் அப்துல்லா ஆசாம் ஆகியோருடன் கடந்த மாதம் பிப்ரவரி 26ஆம் தேதி ராம்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி வன்முறை பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.