உத்தரப் பிரதேச அரசின் மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். 2022ஆம் ஆண்டு அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரசின் முக்கிய முகமாக அவர் களமிறக்கப்படவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
அண்மைக்காலமாக உத்தரப் பிரதேசத்தில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து தொடர் கண்டனங்களை பிரியங்கா எழுப்பிவந்த நிலையில், தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் அவர் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ”கரோனா பாதிப்பு காலத்தில் சுகாதார வசதிகள் முறையாக மேம்படுத்த வேண்டியது கட்டாயம். அதேவேளையில் மஹோபாவில் உள்ள பெண்கள் மருத்துவமனை நிலவரம் கவலை அளிப்பதாக உள்ளது. பரேலி, கோரக்பூர் ஆகிய இடங்களின் நிலையும் மோசமாகத்தான் இருக்கிறது. முதலமைச்சர் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதைத் தவிர்த்து, உண்மையை மறைப்பதில்தான் குறியாக உள்ளார்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 'மக்களிடம் எப்போதும் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும்' - பிரதமர் மோடி