உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கானிப்பூர் விமானப்பகுதிக்கு தனியார் விமானம் ஒன்று தரையிறங்கியது.அப்போது தீடிரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளனது. இதில் பயணம் செய்த விமானியும் அவருடன் இருந்த ஆறு பேறும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இவர்கள் மீட்கப்பட்ட உடனே சிறிது நேரத்தில் விமானம் தீப்பிடித்து எறிய தொடங்கியது,உடனடியாக அந்த இடத்திற்கு நிவாரண மீட்புக் குழு வந்து தீயை அனைத்தனர்.அங்கு வந்த போலீசார் இவ்விபத்துக்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.