உத்தரபிரதேசம் மாநிலம் மணிபுரி பகுதியில் ஆக்ரா-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வந்த சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி சிதைந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 7 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 34 பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.