ETV Bharat / bharat

உயர் கல்விக்கான பொற்காலம்

பல்கலைக்கழகங்கள், உயர் கல்வியின் பீடங்களாக இருக்கின்றன. புதுமையான சிந்தனைகளுக்கு புத்துயிர் கொடுப்பதாகவும், கற்பனை வளம் சிறகடித்துப் பறப்பதற்கான சிறகுகளையும் அவை தருகின்றன. சமூகத்தில் தகுதிவாய்ந்த மனித வளங்களை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவற்றின் தற்போதைய நிலை என்ன?

dsds
sds
author img

By

Published : Mar 23, 2020, 10:09 AM IST

பெரும்பாலானவை போதுமான நிதி இன்றியும், கல்வி அளிக்கும் ஊழியர்கள் பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையானது மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு உண்மையான ஒரு பேரிடியாகும். நடப்பு நிதி ஆண்டில் உயர் கல்விக்கு ரூ.58,000 கோடிகள் தரவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. ஆனால், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உயர் கல்வித்துறைக்கு தோராயமாக ரூ.39,000 கோடிகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத்தொகை, அடிப்படை வசதிகளை உருவாக்க, ஆசிரியர்-மாணவர் சதவிகிதத்தை சரி செய்ய, கல்வி கற்றுத்தருவோர் பதவி இடங்களை உருவாக்க, ஆகியவற்றுக்கு போதுமானது அல்ல என்று அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்களை நிலைக்குழு தொகுத்துக்கொடுத்திருக்கின்றது. என்.ஐ.டி-களில் 37.7 சதவிகித பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும், இதே அளவுக்கு பணியிடங்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கின்றன என்றும் ஐ.ஐ.டி-க்களில் 29 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருக்கின்றன என்றும், தோராயமாக 78,000 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், சராசரியாக மூன்றுக்கு ஒரு பகுதி உயர்கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் கூறுகையில், சீனாவில் ஆண்டு ஒன்றுக்கு உயர்கல்வி க்கு ரூ.10 லட்சம் கோடிகள் ஒதுக்கப்படுகிறது. அதனுடன் ஒப்பிடும்போது, இது கடலின் ஒரு துளிபோலத்தான் என்கிறார்.

இதில் உள்ள குறையை நிலைக்குழுவானது பகுத்தறிந்து கண்டுபிடித்துள்ளது. 50 சதவிகிதத்துக்கும் அதிகமான உயர்கல்வி நிதியை ஐ.ஐ.டி-கள், ஐ.ஐ.எம்-கள் மற்றும் என்.ஐ.டி-களுக்கு கல்வித்துறையானது முன்னுரிமை கொடுத்து ஒதுக்குகிறது. ஆனால், 49 சதவிகித உயர்கல்வி நிதியை நாடு முழுவதும் உள்ள 865 கல்விநிறுவனங்களில் பயிலும் 97 சதவிகித மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. தவிர இதர உள்ளூர் விஷயங்கள் காரணமாக உள்நாட்டு கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

70 ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவராக இருந்த டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், எப்போதுமே அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய நேரத்துக்குத் தகுந்தவாறு உயர்கல்விக்கு வலுவூட்டுவது அவசியத்தேவையாகும் என்று கூறிஇருக்கிறார். வந்து செல்லும் அரசாங்கங்கள் தேசக்கட்டமைப்பில், உயர்கல்வியின் முக்கியத்துவத்தை உணராமல், அறியாமையில் இருக்கின்றன.

இதன் விளைவாக, பல்கலைக்கழகங்களில் நிரப்பட வேண்டிய காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குவிந்து கிடக்கின்றன. வெளிநாட்டு வாழ் மாணவர்களின் விருப்பமான கல்வி வாய்ப்புகளில் இந்தியா 26-வது இடத்தில் இருக்கிறது. எனவே, ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து 2 லட்சம் மாணவர்களை கவர்ந்திழுக்க, சிறப்பு கல்வி மையங்களை உருவாக்குவதற்கான திட்டத்தை நிதி ஆயோக் அண்மையில் முன்னெடுத்துள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் மத்திய அரசு, இந்தியாவில் படியுங்கள் என்ற திட்டத்தின் கீழ் 30 நாடுகளில் இருந்து மாணவர்களை ஈர்த்தது. பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே காலியாக இருக்கும் கல்விப் பணியிடங்களின் நியமனத்துக்கு தேவையான தகுதிகளைக் கொண்ட தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கிடைப்பது முக்கியப் பிரச்னையாக இருக்கிறது.

பி.எச்டி., மற்றும் மேல் நிலை பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்கும் தேர்வாளர்கள் கூட நேர்காணலில் மோசமான தோல்வியடைகின்றனர். இது உயர் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள தரக்குறைவை வெளிப்படுத்துகிறது. நமது எதிர்கால சந்த தியினரை வடிவமைப்பதற்கான தரம்வாய்ந்த கல்வியாளர்கள் கிடைப்பது உண்மையில் சவாலாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழக மானியக்குழுவானது, உயர் கல்விதுறையில் கற்பித்தல் தரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்ய ஒரு புதிய வழிகாட்டு முறைகளின் தொகுப்பை வரையறுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக போலி பி.எச்டி-கள் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது, பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த சூழலில் உயர் தரத்துடன் இலக்கை அடைவதற்கு, ஆழமான புரிதலுடன் கூடிய நீண்டகால செயல் திட்டம் தீட்டுவதில்தான் உண்மையானதீர்வு இருக்கிறது.

புதிய கண்டுபிடிப்புகளில் அரசு ஆர்வமாக இருக்கிறது. ஜிடிபி வளர்ச்சி விகிதம், தொழிலாளர் உற்பத்தி ஆகியவற்றை இயக்கும் மனித வள முன்னெடுப்பில் அரசு கவனம் செலுத்துகிறது. தலைமுறைகளாக தேசத்தை கட்டமைப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நாட்டில் அடித்ததள நிலையில் இருந்தே இந்த முக்கியத்துவம் வாய்ந்த துறை பலவீனமாக இருக்கிறது.

யுனெஸ்கோ ஆய்வில் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட ஆய்வில், மோசமான பள்ளிகள் காரணமாக, கல்வித்துறை 15 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது தெரியவந்துள்ளது. இந்த உண்மை நிலவரத்துக்கு இடையேயும் 15 லட்சம் பள்ளிகளில் ஈர்க்கக் கூடிய காட்சிகளைக் காணமுடிகிறது. கட்டமைப்புகள் முதல் ஆசிரியர் பணியிடங்கள் வரையிலான அனைத்து மட்டங்களிலான பற்றாக்குறை என்பது, குழந்தைகளின் இயற்கையான புத்திசாலித்தனத்தை பாதிக்கும். 19 ஆயிரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நிலவும் மந்த நிலையை போக்காத வரை, ஆசிரியர் பணியின் தரத்தை முன்னெடுக்க முடியாது. பல்வேறு நிலைகளில், நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 74 நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது.

கல்வியின் தரம் மோசமாக இருப்பதனால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. சீனாவின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பி.எச்டி ஆசிரியர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அதிக சம்பளத்துடன் பணியாற்றிவருவது ஈர்க்கும் வகையில் இருக்கிறது. அதிக தகுதி படைத்த ஆசிரியர்களுக்கு, தகுதியான நிலை மற்றும் ஊதியத்தை, பயிற்சிகளை முறையாக அளித்து ஊக்குவிக்க வேண்டிய தேவை இங்கேயும் இருக்கிறது. பன்முக அறிவார்ந்த அடிப்படையிலான சமூக கட்டமைப்பு கொண்ட புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவின் குறிக்கோள் என்பது அவசியம் அடிமட்டத்தில் இருந்து தொடங்கப்படுவதாக இருக்க வேண்டும். தரமான கல்வி என்பது, உயர்கல்வியின் பொற்காலமாக இருக்கிறது. இதுபோன்ற தரமான கல்விதான், தேசமானது அனைத்து மட்டத்திலுமான வளர்ச்சி பெறுவதற்கு உண்மையான வலுவானதாக இருக்கும்.

இதையும் படிங்க: கோவிட்-19: ஒத்திவைக்கப்படுகிறதா டோக்கியோ ஒலிம்பிக்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.