ETV Bharat / bharat

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடக்கும் அரசியலுக்கு இரையாகாதீர்கள்! - பிரகாஷ் ஜவடேகர்

வேளாண் சட்டங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாகவே அமையும். இதனை வைத்து அரசியல் செய்பவர்களிடம் இரையாகிப்போகாமல், விவசாயிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்
author img

By

Published : Oct 4, 2020, 3:27 PM IST

மாயெம் (கோவா): வேளாண் சட்டத்திற்கு எதிராக நடக்கும் அரசியலுக்கு இரையாகி விடாதீர்கள் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விவசாயிகளிடம் கூறியுள்ளார்.

மத்திய அரசால் 'வேளாண் உற்பத்தி-வர்த்தகம்-வணிகச் சட்டம்', 'விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாயிகள் சேவை சட்டம்', அத்தியாவசிய உணவுப் பொருள்கள் திருத்தச் சட்டம்' ஆகிய மூன்று சட்டங்கள் அண்மையில் இயற்றப்பட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. குறிப்பாக இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இச்சூழலில், கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது “ மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை. பஞ்சாப்பில் மட்டுமே இன்னும் போராட்டம் நடக்கிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், இந்த போராட்டங்கள் கூட இயல்பிலேயே அரசியல் கொண்டது.

நஞ்சில்லா உணவு உற்பத்திக்காக 12 ஆண்டுகளாகப் போராடும் குடும்பம்...

கள நிலவரம் என்னவெனில், வேளாண் சட்டங்களை விவசாயிகள் வரவேற்கின்றனர். ஜி.எஸ்.டி காரணமாக நமக்கு ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற முறை கிடைத்தது. தற்போது, ‘ஒரு நாடு ஒரு சந்தை முறை’ வேளாண் சட்டங்களால் கிடைத்துள்ளது. தேசிய தேர்வு முகமை மூலம் ஒரே நாடு ஒரே தேர்வு கிடைத்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தையும் கூட நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம்” என்றார்.

மேலும், வேளாண் சட்டங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாகவே அமையும். இதனை வைத்து அரசியல் செய்பவர்களிடம் இரையாகிப்போகாமல், விவசாயிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.