உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து கடந்த 2ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் தனக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக ட்விட்டரில் அவர் தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு கரோனா பாதிப்புகள் குணமாகின.
இதைத்தொடர்ந்து அவர் வீடு திரும்பினார். எனினும் அவருக்கு உடல் வலி மற்றும் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 18ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இதற்கிடையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இந்நிலையில் அமித் ஷா நலமுடன் இருப்பதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: நீட் தேர்வை கைவிடக்கோரி தலைமை நீதிபதிக்கு மாணவர்கள் கடிதம்!