டெல்லி: 70 நாட்கள் பொது முடக்கம் கழிந்து, சில தளர்வுகளுடன் வணிக வளாகங்கள் ஜூன் 8ஆம் தேதி முதல் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வணிக வளாகங்கள் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வழிக்காட்டுதல் கூடிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதனை கீழே காணலாம்.
- வணிக வளாகங்கள் முகப்பில் கைகளுக்கு பயன்படுத்தும் கிருமி நாசினி, உடற்சூட்டை கண்டறியும் கருவி ஆகியன இருத்தல் அவசியம்
- நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்
- கடைகளுக்குள் இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல் அவசியம். மேலும் அவர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும்
- முகக் கவசம் அணிந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்
- வளாகத்திற்குள் வாடிக்கையாளர்கள் இருக்கும்போது முகக் கவசம் அணிந்திருப்பதை வளாக நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும்
- கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள் வளாகத்திற்குள் இருத்தல் வேண்டும்
- வாகன நிறுத்துமிடம், வளாகத்திற்கு வெளியே இருப்பவர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும்
- அலுவலக நிர்வாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்
- வளாகத்திற்குள் அல்லது வெளியே இருக்கும் தேனீர் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவசிய தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும்
- வளாகத்திலிருந்து வீடுகளுக்கு பொருள்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள் பரிசோதித்து அனுப்ப வேண்டும்
- நீண்ட வரிசையில் இருப்பவர்கள் தகுந்த இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும்
- 6 அடி வரை தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
- இருக்கை வசதிகள் தகுந்த இடைவெளி விட்டு இருத்தல் அவசியம்
- மின் தூக்கியில் (லிஃப்ட்) செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல் அவசியம். அங்கும் தகுந்த இடைவெளி கடைபிடிக்க வேண்டும்
- வளாகத்திற்குள் பெருங்கூட்டங்கள் நடத்துவதற்கான தடை தொடரும்
- அனைத்தும் இடங்களையும் வளாக நிர்வாகம் சுத்தம் செய்து, சுகாதாரத்தை பேணி காப்பது அவசியம்
- பயன்படுத்தப்பட்ட முகக் கவசம், கையுறைகளுக்கென தனி குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும்
- கழிவறைகளை நன்கு சுத்தம் செய்து, அதுவே தொடருதல் அவசியமாக இருத்தல் வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.