பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், டெல்லி லோக் கல்யாணிலுள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் கூடும் இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
கடைசியாக ஜூலை 8ஆம் தேதி அமைச்சரவைக் கூடியது. அப்போது, தொழிலாளர் வைப்பு நிதிச் சலுகை, இலவச ரேஷன் பொருள்கள் வழங்குவதை மூன்று மாத காலம் நீட்டிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் வரை தொழிலாளர் வைப்பு நிதியில் 24 விழுக்காட்டை மத்திய அரசு செலுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், நகர்ப்புறத்தில் குடியேறிய ஏழைகளுக்கு மலிவு விலையில் வாடகை வீடுகளை உருவாக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோவிலை கட்டினால் கரோனா முற்றிலுமாக நமது நாட்டிலிருந்து ஒழிந்துவிடும் - பாஜக எம்பி