புதுச்சேரியில் பிரெஞ்ச் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அழகிய, சிற்பக்கலை நிறைந்த கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன. இவற்றை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்துச் செல்வதோடு புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.
மேலும், நகரின் மையப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில ஓவியங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சில ஓவியங்கள் வேடிக்கையாகவும் இருக்கின்றன.
இந்நிலையில், நகரின் சில பகுதிகளில் உள்ள சேதமடைந்த சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஓவியங்களை இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வரைந்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் சுவர்கள் அழகாக மாறியிருந்தாலும், இது மாதிரியான ஓவியங்களை வரைவது யார் என்று தெரியாமல் வீட்டு உரிமையாளர்கள் ஒருபுறம் புலம்புகின்றனர்.
இதையும் படிங்க: புதுவருடக் கொண்டாட்டங்களின் கண்காணிப்புப் பணிகள் தீவிரம்!