ETV Bharat / bharat

நாட்டின் வேலைவாய்ப்பின்மை 6.1% ஆக அதிகரிப்பு!

டெல்லி: நாட்டின் வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பின்மை
author img

By

Published : May 31, 2019, 8:20 PM IST

நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக நேற்று (வியாழக்கிழமை) பதவியேற்று கொண்டார். இதைத்தொடர்ந்து, மோடியும், அமைச்சர்களாக பதவியேற்றவர்களும் தங்களுக்கு ஒதுக்கபட்ட துறைக்கு அமைச்சர்களாக முறைப்படி இன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017- 2018 ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6.1 விழுக்காடாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜிடிபி எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.8 விழுக்காடாக குறைந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 17 ஆண்டுகளில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.