ETV Bharat / bharat

சருமத்தில் உருவாகும் கறுப்பு நிறத் திட்டுகளின் காரணங்களும் தீர்வுகளும்! - கருப்பாக தோல் நிறம் மாற காரணம்

சருமத்தில் ஏற்படும் கறுப்பு நிறத் திட்டுகளால் பாதிப்புகள் இல்லையென்றாலும், அவை உருவாகுவதன் காரணங்களையும் சிகிச்சை முறைகள் குறித்தும் நம்மிடம் விவரிக்கிறார் கயா கிளினிக்ஸ் மருத்துவத் தலைவர் டாக்டர் சுஷாந்த் ஷெட்டி.

poy
pot
author img

By

Published : Sep 15, 2020, 2:59 PM IST

உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் சாதாரண தோல் நிறத்தை விட சற்று கறுப்பாக காணப்படும். அவற்றை மருத்துவ ரீதியாக ஹைப்பர்பிக்மென்டேஷன் என அழைக்கின்றனர். இந்த நிறத்தால் நமக்கு பாதிப்பு இல்லையென்றாலும், இவை வருவதற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக கயா கிளினிக்ஸ் மருத்துவத் தலைவர் டாக்டர் சுஷாந்த் ஷெட்டியை அணுகினோம்.

இது குறித்து அவர் கூறுகையில், "இந்த ஹைப்பர்பிக்மென்டேஷன் பொதுவாக மரபியல், ஹார்மோன் வழியாக தான் பெரும்பாலும் பரவுகிறது. இவை பார்ப்பதற்கு சிறிய கறுப்பு தடமாக இருந்தாலும் பெரிய பகுதியை உள்ளடக்கியிருக்கும்.

ஹைப்பர்பிக்மென்டேஷன் வகைகள்:

மெலஸ்மா: ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக ஏற்படும் மெலஸ்மா, பெண்கள் மத்தியில் அதிகளவில் காணக்கூடும். ஏனெனில் அவர்களின் கர்ப்ப காலத்தில் வயிறு மற்றும் முகத்தில் இவை உருவாகக்கூடும். இருப்பினும், ஆண்களும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

போஸ்ட் - இன்பிளேம்மட்ரி: இது முகத்தில உருவாகும் பரு , சூடான எண்ணெய் தோலில் படுதல், கொசு கடி அல்லது காயம் போன்றவற்றால் உடலில் ஏற்படக்கூடும். இந்த பாதிப்புகள் சரியாகும் சமயத்தில் தோலில் கறுப்பு நிறத்தை விட்டுச்செல்லும். காலப்போக்கில் இந்தக் கறுப்பு நிறம் தானாகவே மறைந்துவிடும். மாறாக அவற்றை தொந்தரவு செய்தால் நிரந்தரமாவும் மாற வாய்ப்புள்ளது.

சூரியனில் வெளிப்படுதல்: வெயில் சூட்டெரிக்கும் சமயத்தில் வெளியில் உலாவுவதால் நெற்றி, மூக்கு , கைகளில் கூட சிறிய கறுப்பு திட்டுகளைக் காண முடியும்.

மருத்துவ பிரச்னைகள்: நாம் எதேனும் நோய்க்கு அப்ளை செய்யும் மருந்துகளின் விளைவாகவும், சில சமயங்களில் தோலில் கறுப்பு திட்டுகள் உருவாக வாய்ப்புள்ளது.

உண்மையில் என்னதான் உடலில் நடக்கிறது?

மெலனோசைட்டுகள் எனப்படும் தோல் செல்கள், மெலனினை உற்பத்தி செய்கின்றன. இது தான் தோலிற்கான நிறத்தை வழங்குகிறது. இத்தகைய மெலனின் செயல்முறையை சில காரணிகள் தடுப்பதால் கறுப்பு நிறம் உருவாகுகிறது. எடுத்துக்காட்டாக, நம் உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சூரிய வெளிச்சம் அதிகளவில் படுகிறது. அப்பகுதியில் தோல் செல்கள் சேதமடையாமல் பாதுக்காக்க, அதிகப்படியான நிறத்தை வெளிப்படுத்துகையில் கறுப்பு தடங்கள் உருவாக்குகிறது.

தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்:

தோலில் கறுப்பு தடங்கள் உருவாகுவதன் காரணங்கள் பொறுத்தே சிகிச்சை முறைகள் முடிவு செய்யப்படும். மரபணு காரணத்தில் ஹைப்பர்பிக்மென்டேஷன் உருவாகிறது. இதை, சரிசெய்வது கடினமானது. ஒரு சிறிய அடையாளமாக இருந்தால் சிகிச்சை மூலம் அகற்ற முடியும். ஆனால், பெரிய பகுதியை உள்ளடக்கியிருந்தால் நீக்குவது சாத்தியம் இல்லாதது. சூரிய ஒளியிலிருந்து தப்பிக்க சன் ஸ்க்ரீன், குடை போன்றவற்றை எடுத்துச்செல்லாம்.

ஹைப்பர்பிக்மென்டேஷனை மருத்துவ ரீதியாக தடுக்கும் சிகிச்சை:

கெமிக்கல்ஸ் பீலிங்

லேசர் சிகிச்சைகள்

கே-சுவிட்ச் லேசர்

டாபிக்கல் கிரீம்கள்

லைட்னிங் கிரீம்கள்

இந்தக் கறுப்பு தடங்கள் சருமத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாகுகிறது. அவை பாதிப்பில்லாதவை என்றாலும், அகற்ற விரும்பினால் தோல் நிபுணரை அணுகலாம். ஆனால், சிகிச்சை பெறும் சமயத்தில், சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. இல்லையெனில் முடிவுகள் மோசமாக இருக்கலாம். சில சமயங்களில் ஹைப்பர்பிக்மென்டேஷன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் ”என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.