ETV Bharat / bharat

உமீட் திட்டம்: வேலையற்ற இளைஞர்களின் வாழ்வை வளமாக்கும் பால் உற்பத்தி

author img

By

Published : Jul 5, 2020, 4:34 PM IST

ஒரு லிட்டர் பால் 28 ரூபாய்க்கு விற்பனை செய்வதிலிருந்து 572.32 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. உமீட் திட்டத்தின் கீழ், பெண்கள் உள்பட புல்வாமாவில் உள்ள இளைஞர்கள் பால் சங்கங்களை நிறுவி பயனடைந்து வருகின்றனர்.

உமீட் திட்டம்
உமீட் திட்டம்

புல்வாமா: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ஒரு பகுதியினர் ஜம்மு-காஷ்மீரின் கிராமப்புற வாழ்வாதாரத் திட்டமான 'உமீட்' திட்டத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு தானியங்கி பால் சேகரிப்பு மையங்கள் உருவாக்கி கொடுக்கப்படுகிறது. அவர்கள் அதிலிருந்து பாலை சேகரித்து ஸ்ரீநகரில் விநியோகிக்கிறார்கள்.

உமீட் திட்டமானது பட்டதாரி இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தன்னிறைவு பெற ஊக்குவிக்கும் ஒரு மத்திய அரசின் நிதியுதவி திட்டமாகும்.

இது குறித்து பேசிய மாவட்ட உதவி கால்நடை பராமரிப்பு மருத்துவர் அக்தேஷம், காஷ்மீரில் அதிக பால் உற்பத்தி புல்வாமாவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் இங்கு எட்டரை லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் 28 ரூபாய்க்கு விற்பனை செய்வதிலிருந்து 572.32 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், பெண்கள் உட்பட புல்வாமாவில் உள்ள இளைஞர்கள் பால் சங்கங்களை நிறுவி பயனடைந்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.