கரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டறிவதற்கான சோதனையில் உலகின் பல நாடுகள் இணைந்துள்ள நிலையில், இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து நுண்ணுயிர் எதிர்ப்புச் சோதனை, ஆன்டிபயாட்டிக், மரபணு ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய ஐந்து திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளன.
இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த உரிய அனுமதி கிடைத்த பிறகு செப்டம்பர் மாதத்தில் சோதனைகளை மேற்கொள்ள இருநாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இதற்காக இரு நாடுகளும் இணைந்து மொத்தமாக 8 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.