ETV Bharat / bharat

மகாராஷ்டிராவின் முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே!

மும்பை: மகாராஷ்டிராவில் அமையவுள்ள கூட்டணி ஆட்சிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமை வகிப்பார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

uddhav
author img

By

Published : Nov 22, 2019, 7:45 PM IST

சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், "சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உள்ளது.

மகாராஷ்டிராவில் அமையவுள்ள அரசுக்கு உத்தவ் தாக்கரே தலைமை வகிப்பார். மற்ற விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. மூன்று கட்சிகளும் சேர்ந்து நாளை செய்தியாளர் சந்திப்பு நடத்தவுள்ளது. உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்த எட்டப்பட்டுள்ளது" என்றார்.

சரத் பவார்

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தன. தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகளுக்கிடையே முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற விவகாரத்தில் மாற்று கருத்து நிலவியது. இதனால், பாஜக ஆட்சியமைக்க சிவசேனா ஆதரவு தரவில்லை. ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வராத காரணத்தால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: 'மகாராஷ்டிராவில் சிவசேனாதான் ஆட்சி செய்யும்' - சஞ்சய் ராவத் எம்.பி.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.