மேற்கு வங்க அரசு, கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் இரண்டு ஆசிரியைகளை நேற்று பணி இடைநீக்கம் செய்துள்ளது.
ஆங்கில எழுத்துகளைக் கொண்ட பாடப்புத்தகத்தில் "அசிங்கம்" என்ற சொல்லைச் சுட்டிக் காட்டுவதற்காகக் கறுப்பு நிறம்கொண்ட சிறுவனின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதால் கறுப்பின மக்களை இழிவுபடுத்தும் செயல் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் முதற்கட்ட விசாரணையில் "U" என்ற எழுத்திற்கு உதாரணம் கட்ட "UGLY" என எழுதப்பட்டதாகவும் பின்பு "UGLY" என்ற சொல்லுக்கு உதாரணம் வழங்க ஒரு கறுப்பினத்தவரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: சாதித்துக்காட்டிய இந்திய வம்சாவளி!