ETV Bharat / bharat

மருத்துவர் அலட்சியத்தால் கருத்தடை செய்துகொண்ட 2 பெண்கள் உயிரிழப்பு! - மாவட்ட ஆட்சியர் மஹாவீர் பிரசாத் வர்மா

ஜெய்பூர்: மருத்துவர்களின் அலட்சியத்தால் கருத்தடை முகாமில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sterilisation-camp
sterilisation-camp
author img

By

Published : Jul 6, 2020, 7:47 PM IST

ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்திலுள்ள சூரத்கர் என்னுமிடத்தில் கருத்தடை முகாம் நடைபெற்றது. இங்குதான் அந்த உயிரிழந்த இரண்டு பெண்களும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ளனர். இவர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த அனைத்து கருத்தடை முகாம்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் பொறுமையாகச் செய்யப்பட வேண்டிய அறுவைச் சிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்படிருந்த வேளையில், இந்த முகாம்களை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மஹாவீர் பிரசாத் வர்மா கூறியுள்ளார். மேலும், இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 26 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியைச் சுட்டுப்பிடித்த டெல்லி போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.