பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ( ஜூன் 12) இரண்டு பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதால் அவர்களை இந்திய வீரர்கள் தாக்கி சுட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக ராணுவ அதிகாரி தெரிவிக்கையில், 'ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை, 68 பயங்கரவாதிகளை நமது ராணுவ வீரர்கள் கொன்றுள்ளனர்.
பயங்கரவாதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் அயராது உழைத்து வருகின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தடம் பதித்து 15 ஆண்டுகள்... இந்திய கால்பந்து அணியின் மகுடமாகிய சுனில் சேத்ரி!