தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள் போண்டா உமமஹேஸ்வர ராவ், புத்த வெங்கண்ணா மற்றும் ஆந்திர மாநில உயர் நீதிமன்ற வழக்குரைஞர் கிஷோர் ஆகியோரின் கார் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொலிக் காட்சிகள் வைரலாகிவருகின்றன. சம்பவ பகுதிக்கு காவலர்கள் விரைந்துவந்தனர்.
அதற்குள் அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெலுங்குதேசம் கட்சியினர் கூறினர். மேலும் மாநில காவல் துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: அங்கித் சர்மாவை கொலைசெய்தவர் விரைவில் கைதுசெய்யப்படுவார்' - அமித்ஷா