ETV Bharat / bharat

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா; பெங்களூருவில் இருவரிடம் விசாரணை! - terrorists detained in Bengaluru

டெல்லியைச் சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அலுவலர்கள், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வீட்டில் நடத்திய சோதனையில், என்.ஐ.ஏ அலுவலர்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Two suspected terrorists detained in Bengaluru

author img

By

Published : Oct 28, 2020, 1:44 PM IST

பெங்களூரு (கர்நாடகம்): என்.ஐ.ஏ அலுவலர்கள் நகரத்தில் நடத்திய அதிரடி சோதனையில், பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் வீட்டில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமையின் டெல்லி அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், இருவரை கைதுசெய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூரு கலவரத்தில் தொடர்புடைய முக்கிய நபர் கைது!

முன்னதாக, தனியார் மருத்துவமனையின் மருத்துவரான பிரெவ், என்.ஐ.ஏ அலுவலர்களால் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்களை சேர்க்கத் தூண்டும் 'கரன்' (CURRAN) எனும் வாட்ஸ் அப் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.