புல்பானி: ஒடிசாவின் காந்தமால் மாவட்டத்தில், கிராம பஞ்சாயத்தார் மகன் மற்றும் போலீசுக்கு தகவல் கொடுக்கும் உளவாளி என நினைத்து இருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (ஜன.29) இரவு பண்டரங்கி கிராம பஞ்சாயத்து பகுதிக்கு உள்பட்ட குச்சகுடா கிராமத்தில் நடந்தது. கிராம பஞ்சாயத்து தலைவரின் வீட்டுக்குள் புகுந்த 20க்கும் மேற்பட்டவர்கள் அவரது மகனை பிடித்து சுட்டுக்கொன்றனர்.
இதேபோல், அதே கிராமத்தைச் சேர்ந்த ஹேமந்த் பத்ரா என்ற நபரையும் சுட்டுக்கொன்றுள்ளனர். இவர்கள் மாவோயிஸ்டுகளின் உறுப்பினர்களாக இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
குறிப்பாக மாவோயிஸ்டுகளின் பன்சாதரா-கும்சர்-நாகபாலி பிரிவின் உறுப்பினர்களாக இருக்கலாம். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஒரு மோதலில் இந்த அமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் கொலையாளிகள் கையினால் எழுதப்பட்ட சில கைப்பிரதிகளையும் விட்டுச்சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் ஒட்டப்படும் மாவோயிஸ்டுகளின் சுவரொட்டிகள்!