ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் துனாவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நரேஷ் பால் சிங், பச்சு சிங். அவர்கள் இருவரும் ஓ.எல்.எக்ஸ். (OLX) விற்பனை இணையதளத்தில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்தாகப் பதிவிட்டு வாடிக்கையாளர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுவந்தனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் லட்சக்கணக்கான புகார்கள் அவர்கள் மீது குவிந்துள்ளன.
அதனடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார், உதவி ஆணையர் வேல்முருகன், ஆய்வாளர்கள் கீதா, துரை உள்ளிட்ட எட்டு பேர் ஒரு வாரமாக ராஜஸ்தான் மாநிலத்தில் முகாமிட்டு குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடியில் துனாவர் கிராமமே உடந்தையாக இருந்து ரூ.200 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் தட்கல் ரயில் டிக்கெட் மோசடியில் கைது!