சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கரோனா) வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்துவரும் வேளையில், கேரளாவில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
அம்மாநிலத்தின் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கோவிட்-19 பாதிக்கப்பட்டுள்ளதாக, அரசு சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதில் ஒருவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு நாடு திரும்பிய மருத்துவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதன்மூலம், கேரளாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 107 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மேற்கு வங்கத்தில் 10 பேர் அனுமதி!