தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டம் ஜைனாபோரா பகுதியில் பிரிவினைவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இந்தத் திடீர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நள்ளிரவு தேடுதல் நடவடிக்கையின்போது பிரிவினைவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் பிரிவினைவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் முழு விவரங்களைப் பாதுகாப்புப் படையினர் சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கடந்த 17ஆம் தேதி அன்று சோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர், பிரிவினைவாதிகளிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : நோய் கண்டறியும் உபகரண தயாரிப்பு மே மாதம் தொடங்கும் - மத்திய அமைச்சர்