சட்டப்பிரிவு 370யில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு ஹிந்து மதத்தினர் குஜாரத் வந்து திருமணம் செய்துள்ளனர். பாகிஸ்தானில் இந்து ஜோடிகளின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராஜ்கோட் வந்தடைந்த இருவரும் அங்குள்ள மஹேஸ்வரி சமாஜ் சமூகத்தை சேர்ந்தவர்களின் உதவியால் திருமணம் செய்து கொண்டனர்.
![pakisthan couples got married](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4173930_457_4173930_1566194351640.png)
இதுவரை 90க்கும் மேற்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த காதல் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தோம் என்று ராஜ்கோட் மஹேஸ்வரி சமாஜ் இளைஞர் அமைப்பு செயலாளர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் 15 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தாகவும், இந்த ஆண்டு இதுவரை 2 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளதாகவும் அக்கூட்டமைப்பினர் தெரிவித்தனர். அதேபோல், திருமணமான ஜோடிகள் இனி இங்கே தான் இருப்பார்கள் எனவும் கூறினர்.