தெலங்கானாவில் காவலர் ஒருவர் வங்கி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வங்கியில் மக்கள் கூட்டம் அதிகமானதால், வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் இருவர், அந்த காவலர் மீது இரும்புக் கம்பியை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமுற்ற காவலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
விசாரணையில் காவலரை தாக்கியவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் மற்றும் அவரின் நண்பர் எனத் தெரிந்தது. இதையடுத்து காவலர்கள் அவர்களை கைது செய்தனர்.
கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என உலக சுகாதா அமைப்பு அறிவுறுத்தியுள்ளது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு: மாநிலங்கள் வாரியாக முழு விவரம்