கேரள மாநிலம் இடுக்கி அருகே வலியதோவாலா பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் இருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர். இதில், ஒரு பெண்ணுக்குப் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவம் பெற்றுவருகிறார்.
கொலைசெய்யப்பட்ட ஜாம்ஸ், சுக்லால் ஆகிய இருவரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சய் பாஸ்கியை காவல் துறையினர் காவலில் (கஸ்டடி) எடுத்து விசாரித்துவருகின்றனர்.
கிடைத்த தகவலின்படி, தோட்டத் தொழிலாளர்கள் நான்கு பேர் ஒரே வீட்டில் வசித்துவந்தனர் என்பதும், அவர்களிடம் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு இருந்துவந்ததாகவும், இதுவே கொலைக்கு வழிவகுத்ததாகவும் தெரியவருகிறது.