ஒடிசாவில் கியோன்ஜ்கர் மாவட்டத்தில் கட்டாகான் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி எல்லைக்குட்பட்ட பல்ஜியோடி என்ற இடத்தில் மூன்று யானைகள் சாலையைக் கடக்க முயன்றன. அப்போது அதிவேகமாக வந்த லாரி ஒன்று யானைகள் மீது மோதியது.
![ஒடிசா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/od-kjr-elephantdead-7203607_22082019070951_2208f_1566437991_1083_2208newsroom_1566440273_978.jpg)
இதில் இரண்டு யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும், ஒரு யானை பலத்த காயமடைந்துள்ளது.
![ஒடிசா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/od-kjr-elephantdead-7203607_22082019070951_2208f_1566437991_956_2208newsroom_1566440273_1041.jpg)
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வனத் துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், காயமடைந்த யானைக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
![ஒடிசா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/od-kjr-elephantdead-7203607_22082019070950_2208f_1566437990_26_2208newsroom_1566440273_850.jpg)