ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், கிரிரீ பகுதியில் உள்ள நகா எனும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது ஆயுதம் எந்திய பிரிவினைவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த இருவரும், ஒரு சிறப்பு காவல் அலுவலரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, காயமடைந்த மூன்று வீரர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று பேரும் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதற்கிடையே, புல்வாமா மாவட்டம் துஜன் கிராமத்தில் உள்ள பாலத்தின் அடியே பிரிவினைவாதிகள் தாக்குதல் நடக்கும் நோக்கில் பயங்கர வெடி குண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர். ஆனால், பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கையால் வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "தாக்குதல் நடத்திய ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் மீது, பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். மத்திய ரிசர்வ காவல் படையை சேர்ந்த வீரர்கள் உடனடியாக முழுப் பகுதியையும் சுற்றி வளைத்தனர். தாக்குதல் நடத்தியவர்களை அவர்கள் தேடி வருகின்றனர்" என்றார்.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ஸ்ரீநகரின், நவுகாம் பகுதியில் இந்திய பாதுகாப்பு படை மீது ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ஜம்மு-காஷ்மீர் காவலர்கள் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: விடியவிடிய வெள்ளத்தின் நடுவே சிக்கிய இளைஞர்; பத்திரமாக மீட்ட விமா