ETV Bharat / bharat

கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட இருவர் தனி விமானம் மூலம் சென்னை - கொல்கத்தா பயணம்! - கோவிட்-19 தனி விமானத்தில் பயணம்

கொல்கத்தா : சென்னையில் இரண்டு நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இருவர், தனி விமானம் மூலம் கொல்கத்தாவுக்குச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

covid 19
covid 19
author img

By

Published : Jun 16, 2020, 4:59 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் சூழலில், விமானங்கள், ரயில்களின் மூலம் வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் கரோனா பரிசோதனை உட்படுத்தப்பட்ட பிறகே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இரண்டு நாள்களுக்கு முன்பு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட இருவர், தனி விமானம் மூலம் கொல்கத்தா சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள், கொல்கத்தா சென்றடைந்ததைத் தொடர்ந்து, ஈஸ்ட் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது மேற்கு வங்க மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து துறையினரின் அலட்சியத்தினாலே இந்த சம்பவம் நடந்திருப்பதாக அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சுபேந்து ஆதிக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா-சீனா மோதல்: தமிழ்நாட்டு வீரர் வீரமரணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.