சத்தீஸ்கர் மாநிலத்தின் கனிம வளம் மிகுந்த மாவட்டமான கோர்பா பகுதியில் சட்டவிரோதமாக பல நிலக்கரி சுரங்கங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் ஹஸ்டியோ நதிக்கரையின் அருகில், அமைந்துள்ள குவாரியில் நிலக்கரி எடுக்க முயன்றபோது பெண் உள்பட இரண்டு பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் பேசுகையில், ''ஹஸ்டியோ நதிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் நிலக்கரி எடுக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை பூரனி பாஸ்தி பகுதியில் வசிக்கும் லக்ஷ்மின் மஞ்சி (35), சிவ்லால் மஞ்சி (21) ஆகியோர் நிலக்கரி எடுக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென மணல் சரிய, இருவரும் சிக்கிக்கொண்டனர். இவர்களைக் காப்பாற்ற உடனிருந்தவர்கள் முயன்றும், காப்பாற்ற முடியவில்லை'' என்றார்.
இதையடுத்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலை பார்க்க சொன்ன உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவலர்